ஆகச்சிறந்த ஒரு வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்ட ஃபால்அவுட், கிட்டத்தட்ட எதுவுமே எஞ்சியிராத ஒரு உலகத்தில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களின் கதை. பேரழிவு நடந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு, சொகுசான ஃபால்அவுட் ஷெல்ட்டரில் வசிக்கும் ஒரு அமைதியான குடிமகள் மேற்பரப்புக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறாள் – அவளுக்காக காத்திருக்கும் வேஸ்ட்லாண்டை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.